இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பனிச்சரிவில் சிக்கிய, ௧௨ வயது சிறுமி, 18 மணி நேரத்திற்குப் பின், உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில், பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இங்குள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதியிலும் பனிச்சரிவுஏற்பட்டுள்ளது. இதில், ௭௬ பேர் இறந்துள்ளனர். அங்குள்ள, ஷாஹனாஸ் என்பவரது மாடி வீடு, பனிச்சரிவில் மூழ்கியது. தகவல் அறிந்த, பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது, பனிச்சரிவுகளுக்கிடையே, சமினா பிபி, ௧௨, என்ற சிறுமி உயிருடன் இருந்தார். அவரது கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டதுடன், வாயில் இருந்து ரத்தமும் வெளியேறியது. அதிகாரிகள் அவரை மீட்டு, முசாபராபாதில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த பனிச்சரிவில் சிக்கி, சமினா பிபியின் சகோதரன், சகோதரி இறந்தனர். பனிச்சரிவு நடந்து, ௧௮ மணி நேரத்திற்குப் பிறகு சமினா பிபி உயிருடன் மீட்கப்பட்டது பெரும் அதிசயம் என, அதிகாரிகள் கூறினர்.
உலக செய்தி
.jpg)












0 Comments
No Comments Here ..