28,Apr 2024 (Sun)
  
CH
உலக செய்தி

டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம், மக்கள் பிரதிநிதிகள் சபையில் இருந்து, செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும், 21ல் விசாரணை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முயன்று வருகிறார்.அவருடைய மகன், ஐரோப்பிய நாடான உக்ரைனில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். ஜோ பிடன் மீது பொய் வழக்குகளை தொடரும்படி, உக்ரைனுக்கு, அதிபர் டிரப்ம் நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.அதையடுத்து டிரம்ப் மீது கண்டன தீர்மானத்தை, ஜனநாயகக் கட்சி கொண்டு வந்தது. பிரதிநிதிகள் சபையில், சமீபத்தில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து, மேல்சபையான செனட்டில் விவாதித்து ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும்.செனட் சபையில், குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. அதனால், இந்தத் தீர்மானம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என, கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதிநிதிகள் சபை, இந்த தீர்மானத்தை, செனட் சபைக்கு அனுப்பாமல் இழுத்தடிப்பு செய்தது.

பிரதிநிதிகள் சபையின் பெண் சபாநாயகர் நான்சி பெலோசி வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக, குடியரசு கட்சி கூறி வந்தது.இந்நிலையில், இந்த தீர்மானத்தை செனட் சபையில் விவாதிப்பதற்காக, பிரதிநிதிகள் சபை அனுப்பி வைத்துள்ளது. இதற்கான உத்தரவில் பெலோசி கையெழுத்திட்டார்.அதையடுத்து செனட் சபையில், வரும், 21ல் விசாரணை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட் விசாரணை நடத்துவார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதிபர் ஒருவர் மீது, கண்டன தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுவது, இது மூன்றாவது முறையாகும்.

டிரம்ப் உத்தரவுக்கு தடை

'அகதிகள் மறுவாழ்வுக்கான முகாம்களை நடத்துவதற்கு, உள்ளூர் மற்றும் மாகாண அரசின் ஒப்புதல் பெற வேண்டும்' என, கடந்தாண்டு செப்.,ல் அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். அது இந்தாண்டு ஜூனில் இருந்து அமலுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த உத்தரவு, அகதிகளுக்கான முகாம்களை மூடும் வகையில், மாநிலங்களுக்கு அதிகாரம் அளிப்பதாக உள்ளதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதை விசாரித்த, மேரிலேண்ட் மாவட்ட நீதிமன்றம், டிரம்ப் உத்தரவை செயல்படுத்த தடை விதித்துள்ளது.




டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பப்பட்டது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு