நிதியமைச்சர் நிவாரணத்தை வழங்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(udaya gammanpil) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை ரூ.15/-மற்றும் ஒரு லீட்டர் டீசல் ரூ. 25/- ஆல் உயர்த்துமாறு லங்கா ஐஓசி கேட்டுக் கொண்டதாக அமைச்சர் கூறினார்.
. இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனமும் விலை உயர்வை கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றார்.
0 Comments
No Comments Here ..