04,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

நாட்டை விட்டு விலகிச் செல்லும் குறைந்த அழுத்தப் பிரதேசம் - நாடு முழுவதும் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்கின்றது.

எனினும், நாடு முழுவதும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.





நாட்டை விட்டு விலகிச் செல்லும் குறைந்த அழுத்தப் பிரதேசம் - நாடு முழுவதும் ஏற்படவுள்ள மாற்றம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு