எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த விசேட நிகழ்ச்சி எதிர்வரும் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய இடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
2021ஆம் ஆண்டில் இதுவரை 22,902 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 2,979 பேர் ஒக்டோபர் மாதத்தில் அடையாளம் காணப்பட்டனர்.
அத்துடன், இம்மாதம் கடந்த 4 நாட்களில் 505 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன்படி, அடுத்த சில வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..