ஜனாதிபதி தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் எதிர்க்கட்சி என்ற வகையில் போராட தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பியகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து MCC, எக்ஸா, சோபா போன்ற ஒப்பந்தங்களை கிழித்து எறிவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் எதிர்க்கட்சி என்ற வகையில் ஜனநாயக ரீதியல் போராட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிக நாட்கள் எதிர்க்கட்சியில் இருப்பதற்கு தாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
0 Comments
No Comments Here ..