பசுமை வலயத்தில் இருந்து சிவப்பு வலயத்திற்கு மாறினால் விமான நிலையங்களை மூட நேரிடும். சுற்றுலா பயணிகள் வருகை வீழ்ச்சி அடையும்.
முகத்தின் மீது கோபத்தில் மூக்கை வெட்டிக் கொள்வதைப் போன்று அரசின் மீதான கோபத்திற்காக முழுநாட்டிலும் கொவிட்டை பரப்ப வேண்டாம் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச (Wimal Weerawansa) தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் உரையாற்றிய அவர், உங்கள் அரசு இன்றிருந்தாலும் இதே நெருக்கடிகளை சந்தித்திருக்கும்.
பாரிய உற்பத்தி மறுமலர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. நல்ல நோக்கத்துடனே சேதனப் பசளை பயிர்ச்செய்கையை ஜனாதிபதி அறிமுகப்படுத்தினார்.
நல்லநோக்கம் மற்றும் அது வெற்றி பெற போதுமானதல்ல. விவசாயிகளுக்கு பசளை வழங்கும் பொறுப்பை உரக்கம்பனிகளுக்கு வழங்கியது ஜே.ஆர் தான். ஆனால் அதற்கு முன்னர் பயிர் அதிகாரி ஒருவரே இருந்தார். அவர் தான் நிலத்திற்கு உகந்த பசளையை பரிந்துரைப்பார்.
100 வீதம் சேதனப் பசளை பயன்பாடு என்றோ 100 இரசாயனப் பசளை பயன்பாடு என்றோ தீர்மானித்து இதனை மேற்கொள்ள முடியாது. வர்த்தக நோக்கிலான பயிர்ச்செய்கையில் அதற்கு ஏற்றவாறான வாய்ப்பு இருக்க வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என பல நாடுகள் தமது அரிசி கையிருப்பை விற்பதை நிறுத்தியுள்ளன.
0 Comments
No Comments Here ..