12,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

ஆளும் தரப்பிற்கு விழுந்த பலத்த அடி -வீழ்ச்சியடையும் செல்வாக்கு?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொரணை பிரதேச சபை மற்றும் தலவாக்கலை லிதுல நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (07) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

ஹொரண பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 25 வாக்குகளும் ஆதரவாக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 7 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தலவாக்கலை லிதுல நகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி உறுப்பினர்கள் இருவர் எதிராக வாக்களித்ததன் காரணமாக பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினர்களான சந்தன குணதிலக மற்றும் பிரசன்ன விதானகே ஆகிய இருவரும் 2022 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். 





ஆளும் தரப்பிற்கு விழுந்த பலத்த அடி -வீழ்ச்சியடையும் செல்வாக்கு?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு