யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சங்கானையில் வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவுகள், முச்சக்கர வண்டி, மீன் தொட்டி, தண்ணீர் குழாய், கதிரைகள் மற்றும் வேலி தகரங்கள் என்பவற்றினை வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..