09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள புதிய வைரஸ்: அவசரமாக கூடும் உலக சுகாதார அமைப்பு

சீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸ் நோய்யை, சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கலாமா என்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு கூடவுள்ளது.

இதனை தீர்மானிக்க முக்கிய அவசர குழு நாளை (புதன்கிழமை) கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் மற்ற பகுதிகள் மற்றும் அண்டை நாடுகளில் பரவுவதற்கு முன்பு அதன் மூலத்தை கண்டறியுமாறு உலக சுகாதார அமைப்பு சீனா அரசை முன்னதாக வலியுறுத்தியிருந்தது.

அறிவியலில் முன்பு அறியப்படாத புதிரான வைரஸ் வகையொன்று சீனாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு மொத்தமாக 170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதுவரை 3 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 4ஆவதாக ஒருவர் உயிரிழந்ததாக வுஹான் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தீவிர நுரையீரல் நோயை உருவாக்கி வருகிறது.

உலகையே அஞ்ச வைத்துள்ள கொடிய சார்ஸ் வைரஸ், கொரானா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. கொரானா வைரஸ் சீனாவின் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் நேரடி விலங்குச் சந்தையிலிருந்து பரவியுள்ளது. முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் இவ்வைரஸ் பரவும் தன்மை கொண்டது.

வுஹான் மற்றும் ஷென்சென் ஆகிய சீன நகரங்களில் பரவும் இந்த கொரானா வைரஸ் தாக்குதலால் சுவாசக் கோளாறு, அதிகப்படியான காய்ச்சல் ஆகியவை ஏற்படுகிறது.

இதன்; காரணமாக சீனாவில் பல பகுதிகளில், பொதுமக்கள் அனைவரும் முகமூடி (வாய்க் கவசம்) அணிந்து செல்வதை காண முடிகிறது.





உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள புதிய வைரஸ்: அவசரமாக கூடும் உலக சுகாதார அமைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு