24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

புதிய ஆண்டில் அரசாங்கத்தின் இலக்கு இதுவே! வாழ்த்துச் செய்தி பிரதமர் உறுதி

அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேறச் செய்யும் 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் என சிறிலங்காப் பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 

உலகளாவிய தொற்று நிலைமைக்கு முகங்கொடுத்து கடந்த ஆண்டில் இலங்கை முகங்கொடுத்த சவால்கள் பலவாகும். சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான சவால்களை வெற்றி கொள்வதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்றிய அர்ப்பணிப்பை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மக்களின் பாதுகாப்பிற்காகவே கடந்த ஆண்டில் முன்னுரிமை வழங்கியிருந்தோம். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக செயற்படுத்தியதன் ஊடாக உங்கள் அன்பிற்குரியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கான நாட்டு மக்களின் உயிரை பாதுகாக்க எமக்கு முடிந்தது.





புதிய ஆண்டில் அரசாங்கத்தின் இலக்கு இதுவே! வாழ்த்துச் செய்தி பிரதமர் உறுதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு