15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் கொவிட் தொற்றால் அதிகம் உயிரிழந்தவர்கள் யார்?

இலங்கையில் கொவிட் நோயினால் உயிரிழந்தவர்களில் 52%இற்கும் அதிகமானவர்கள் நீரிழிவு நோயாளிகள் என இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமணதிலக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் அண்மையில் கொவிட் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“நீரிழிவு நோய் மற்றும் பிற தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த நோயும் இல்லாதவர்களை விட, இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது அநேகமாக முன்கணிப்பை விட பத்து மடங்கு அதிகமாகும்.

ஏனைய நாடுகளின் புள்ளிவிவரங்களுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்ட இறப்புகளில் 84 வீதம் நீரிழிவு மற்றும் பிற தொற்றாத நோய்களால் ஏற்பட்டுள்ளது.





இலங்கையில் கொவிட் தொற்றால் அதிகம் உயிரிழந்தவர்கள் யார்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு