வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வான் கொக்காவில் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்து குறித்து மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..