நாட்டின் நான்கு நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய,கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு வளி மாசடைந்துள்ளது.
பலத்த காற்று வீசுவதால், வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,மின்னுற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்பிறப்பாக்கிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..