ஒப்பீட்டளவில் இலங்கையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.
கோவிட் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டமை மற்றும் உரிய தகவல்களை வழங்கத் தவறியமை ஆகிய ஏதுக்களினால் உலக கோவிட் மரண வீதத்தை விடவும் இலங்கையில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கோவிட் மரண வீதம் 1.5 ஆக காணப்படுவதுடன் இலங்கையில் இந்த எண்ணிக்கை 2.54 ஆக காணப்படுகின்றது.
இந்த புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் அபாய நிலை ஏற்படும் என்பதனை புரிந்து கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பீ.சீ.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் குறைந்தளவில் மேற்கொள்ளப்படுவதனால் ஒமிக்ரோனை விட்வும் ஆபத்தான திரிபுகள் ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசியை வயது முதிர்ந்தவர்களில் பலர் இன்னும் பெற்றுக்கொள்ளாத நிலை காணப்படுவதாகவும் அது ஆரோக்கிமான நிலைமை அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..