17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பில் கோவிட் தொற்றால் உயிழப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியினுள் கோவிட் தொற்றுக்குள்ளாகியவர்களில் பூஸ்டர் தடுப்பூசி பெற்ற எவரும் உயிரிழக்கவில்லை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இந்த தகவலை வெளியிட்டார்.  

இதுவரையில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி பெறாதவர்களும், ஒரு தடுப்பூசி மாத்திரம் பெற்றவர்களுமே அதிகமான உள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்கள் யாரும் கோவிட் தொற்றினால் உயிரிழக்கவில்லை என்பதனை உறுதியாக கூற முடியும். இதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உடனடியாக மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





கொழும்பில் கோவிட் தொற்றால் உயிழப்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு