12,Jan 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

எங்களால் அனுமதிக்க முடியாது - நாமல் ராஜபக்ச திட்டவட்டம்

எங்களால் ஒருபோதும் பகிடிவதையை அனுமதிக்க முடியாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் மகனாகயிருந்தாலும் சரி சாதாரண பிரஜையின் மகனாகயிருந்தாலும் சரி அவருக்கு எதிராக ஒரே நாடு ஒரே சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் மக்கள் இதனையே அரசதலைவரிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

ராகமமருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணான்டோவின் மகனிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

அருந்திக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்,ஏதோ நடந்துள்ளது அவருடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார் .ஆகவே நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 அரசதலைவரிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் ஒரு நாடு ஒரு சட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தவறு செய்திருந்தால் அவர்தண்டிக்கப்படுவார் அப்பாவி என்றால் நீதிமன்றில் அவர் தன்னை நிருபிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





எங்களால் அனுமதிக்க முடியாது - நாமல் ராஜபக்ச திட்டவட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு