மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட எருக்கலம் பிட்டி பகுதியில் ஐஸ்ரக போதைப் பொருளுடன் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியைச் சேர்ந்த இருவரும் பேசாலை பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூர் பெறுமதியில் ஒரு கோடி மதிக்கத்தக்க ஒரு கிலோ ஐஸ் போதைப் பொருளுடனே மேற்படி மூன்று சந்தேக நபர்களை மன்னார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றபட்ட போது பொருள் தொடர்பாகவும் அவை எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் மூவரும் மன்னார் நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..