30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

அவுஸ்திரேலியாவில் 220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கியதால் உருவான பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

உலகின் மிகப் பழமையான விண்கல் ஒன்று 220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள யர்ராபூபாவை தாக்கி ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது பூமியின் வயதில் பாதியை கொண்டது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். யர்ராபூபா, பெர்த் நகரில் இருந்து 600 கி.மீ. வட கிழக்கில் அமைந்துள்ளது.


விண்கல் தாக்கி பள்ளம் ஏற்பட்ட இடத்தில் பாறையில் காணப்பட்ட தாதுக்களை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். அந்த ஆராய்ச்சியை கர்டின் பல்கலைக்கழகத்தினர் நடத்தி உள்ளனர். இதன் முடிவுகள், ‘நேச்சர் கம்யூனிகேசன்ஸ்’ பத்திரிகையில் நேற்று வெளியாகி உள்ளது.


இந்த பள்ளம், 1979ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்போது இந்த பள்ளம் எவ்வளவு பழமையானது என்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதிக்கவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.


பல கோடி ஆண்டுகளில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக இந்த பள்ளம், கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கிறது.


இந்த பள்ளம் குறித்து ஆராய்ச்சியாளரான பேராசிரியர் கிறிஸ் கிர்க்லாண்ட் பி.பி.சி செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, அந்த நிலப்பரப்பு உண்மையில் மிகவும் தட்டையானது. ஏனென்றால், அது மிகவும் பழமையானது. அங்கு உள்ள பாறைகள் தனித்துவமானவை என குறிப்பிட்டார்.




அவுஸ்திரேலியாவில் 220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கியதால் உருவான பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு