யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மருத்துவ மாணவியின் கொலை குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்று வந்த 29 வயதுடைய திருமணமான மாணவி நேற்று (22) மதியம் அவரின் கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
குடும்ப தகராறு காரணமாக 30 வயதுடைய அவரது கணவரால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.
சந்தேகநபர் பரந்தன் இராணுவ முகாமில் பணி புரியும் இராணுவ சிப்பாய் என தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













0 Comments
No Comments Here ..