14,Mar 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

மூன்றாம் உலகப் போரின் இருண்ட நிழல்கள் எழுகின்றன!

உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பை ரஷ்யா நேற்று (24ம் திகதி) தொடங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்ய - உக்ரைன் எல்லைக்கு அருகே நிலைகொண்டுள்ள ரஷ்ய இராணுவத்தினர் நேற்று காலை முதல் உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மீது வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ஷெல்களை வீசத் தொடங்கியுள்ளன. தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்திலேயே உக்ரைன் தலைநகர் கிவில் சைரன்கள் ஒலித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிவ் விமான நிலையத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு மற்றும் வெடி சத்தங்களும் கேட்டன. விமான நிலையத்தில் உள்ள இராணுவ மையத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு உக்ரைனில் தனிநாடு கோரி போராடும் பிரிவினைவாதிகளை பாதுகாக்க ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

உக்ரைனில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி எச்சரித்துள்ளார், உக்ரைனை நிராயுதபாணியாக்கி அதன் தலைவர்களை நீதியின் முன் நிறுத்துவதே தனது இலக்கு என்று கூறினார்.

பல வாரங்களாக உக்ரேனிய எல்லைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ரஷ்யாவின் துருப்புக்கள் உக்ரேனுக்குள் நுழைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஐரோப்பாவை மீண்டும் ஒரு போருக்குள் தள்ள உதவ வேண்டாம் என்று ரஷ்யாவிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.





மூன்றாம் உலகப் போரின் இருண்ட நிழல்கள் எழுகின்றன!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு