15,May 2024 (Wed)
  
CH
தொழில்நுட்பம்

பிப்ரவரியில் விற்பனைக்கு வரும் மோட்டோ ரேசர்

மோட்டோரோலா நிறுவனத்தின் ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் மடங்கக்கூடிய OLED சினிமா விஷன் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை பாதியாக மடிக்க வழி செய்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டாவது ஸ்கிரீன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஸ்கிரீனினை குவிக் வியூ எக்ஸ்டெர்னல் டிஸ்ப்ளே என மோட்டோரோலா அழைக்கிறது.

அமெரிக்காவில் இதன் விலை 1,499.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,08,230) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜனவரி 26-ம் தேதி துவங்குகிறது. இதன் விற்பனை பிப்ரவரி 6-ம் தேதி துவங்க இருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோ ரேசர் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் QLED HD+ 876×2142 பிக்சல் மடிக்கக்கூடிய ஸ்கிரீன், 2.7 இன்ச் 600×800 பிக்சல் குவிக் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 5 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 2510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், இசிம் வசதி, ப்ளூடூத், 4ஜி எல்.டி.இ., வைபை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.





பிப்ரவரியில் விற்பனைக்கு வரும் மோட்டோ ரேசர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு