11,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

எரிபொருளாக மாறும் கழிவுகள் ரயில்வேயில் புது ஆலை

புதுடில்லி கழிவுகளை ஆற்றலாக மாற்றும் ஆலை, கிழக்கு கடற்கரை ரயில்வேயில் இணைக்கப்பட்டுள்ளது. இது, இந்திய ரயில்வேயில் இணைக்கப்பட்டுள்ள முதல் ஆலையாகும்.இது குறித்து, கிழக்கு கடற்கரை ரயில்வே செய்தித் தொடர்பாளர், ஜே.பி.மிஷ்ரா கூறியதாவது:பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவுகளை, திரவ எரிபொருள், எரிவாயு, கார்பன் மற்றும் நீர் போன்ற ஆற்றல்களாக மாற்றும் ஆலை, கிழக்கு கடற்கரை ரயில்வேயில் இணைக்கப்பட்டுள்ளது.

'பாலிகிராக்' என்ற நவீன தொழில்நுட்பம், அதில் பயன்படுத்தப்படுகிறது. இந்திய ரயில்வேயில் இணைக்கப்பட்டுள்ள முதல் ஆலை இது.ரயில் வண்டிகளை பழுதுபார்க்கும் பட்டறைகளில், வெளியேறும் கழிவுகளை அகற்றும் முறைகள், அப்போது இல்லை. ஆகையால், அந்த கழிவுகள், நிலப்பரப்புகளில் கொட்டப்பட்டன.அதனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இப்போது அந்த கவலை இல்லை. கழிவுகளை, நேரடியாக, இயந்திரத்திற்குள் செலுத்தினால், அந்த இயந்திரம், அவற்றை டீசலாக மாற்றிவிடும்.இதனால், சுற்றுச்சூழல் பாதிக்காது. இந்த ஆலையை நிறுவ, அதிக இடம் தேவைப்படாது. இதில் உற்பத்தியாகும் எரிவாயு, அந்த இயந்திரத்திற்கு தேவையான ஆற்ற லாக உபயோகிக்கப்படும்.இதனால், அதை இயக்கும் செலவு குறைவாகவே இருக்கும்.இந்த ஆலை, 2 கோடி ரூபாய் செலவில், மூன்று மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த இயந்திரம், ஒரே சமயத்தில், 500 கிலோ எடை உள்ள கழிவுகளை, ஆற்றலாக மாற்றும் திறன் கொண்டது.இதில் உற்பத்தியாகும் ஆற்றல் மூலம், ஆண்டுக்கு, 17.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவு, ஒரு ஆண்டுக்கு, 10.4 லட்சம் ரூபாய் வரை ஆகும் என, கணக்கிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.





எரிபொருளாக மாறும் கழிவுகள் ரயில்வேயில் புது ஆலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு