மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனும், ஜனாதிபதி சாரணர் விருது பெற்றவருமான தேவேந்திரன் மதுஷிகன் (வயது20) பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
நேற்று (28.05.2023) அதிகாலை 1 மணியளவில் தனுஷ்கோடியிலிருந்து தலை மன்னாரை நோக்கி தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்த தேவேந்திரன் மதுஷிகன் பிற்பகல் 03.05 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.
தற்போது 20 வயதான மதுஷிகன், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பன்னிரண்டு வயதில் தனது நீச்சல் பயிற்சியை ஆரம்பித்து மாகாண மற்றும் திறந்த மட்ட நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளார்.
0 Comments
No Comments Here ..