23,May 2025 (Fri)
  
CH
இலங்கை செய்தி

பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவது தொடர்பாக ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன-காவல்துறை

பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவது குறித்து போலியான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்கள் குறித்து சிஐடியினரும் புலனாய்வுபிரிவினரும் உன்னிப்பாக அவதானித்துவருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் கடத்தப்படுவதாக போலியான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன எவரும் இதற்கு பலியாக கூடாது என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறுவர்களை கடத்தும் குழு எதுதொடர்பிலும் இதுவரை பொலிஸார் எந்த தகவல்களை யும் புகைப்படங்களையும் வெளியிடவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சில தனிநபர்கள் இவ்வாறான போலியான தகவல்களை வெளியிடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.



பொலிஸார் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் சிலரை கைதுசெய்ய உள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைமாணவர்கள் சிறுவர்கள் கைதுசெய்யப்படுவது குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனதெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் எனினும் இவ்வாறான தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டவேளை அனேகமானவை பொய் என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.





பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவது தொடர்பாக ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன-காவல்துறை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு