16,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

சர்வதேச பல்கலைக்கழகத்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்க எதிர்பார்ப்ப்பு- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட காலநிலை மாற்றம் தொடர்பான செயலக அதிகாரிகளுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுமார் 130 விஞ்ஞானிகளைக் கொண்ட குழுவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அவர்களின் சர்வதேச தொடர்புகளை இந்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளுக்காக பெற்றுக்கொள்வதே இதன் நோக்கமாகும்.


இவ்வருட ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் நடைபெற உள்ள இந்நாட்டிற்கு வருமாறு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச நிபுணர்கள் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைசார் கருத்துப் பரிமாறல்களில் ஈடுபடுதல், உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடல் மற்றும் கொள்கை கருத்துப் பரிமாற்றங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஆராய்வதும் அவர்களின் வருகையின் நோக்கமாகும்.


உத்தேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளுக்குப் பங்களிக்க கொரிய எக்ஸிம் வங்கியும் தற்போது முன்வந்துள்ளதாகவும், ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி. (MIT) போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களும் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.





சர்வதேச பல்கலைக்கழகத்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்க எதிர்பார்ப்ப்பு- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு