25,Aug 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் உயிருக்கு ஆபத்து ஏர்படுத்தும் வித்தத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

இது தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலஸ் உத்தரவிட்டுள்ளார்.


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள அமைச்சர் இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொலிஸாரிடம் இது குறித்து முறைப்பாடுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை அது தாக்குதல் சம்பவமில்லை என நான் கருதுகின்றேன் அந்த சம்பவம் குறித்து வீடியோ உள்ளது என தெரிவித்துள்ளார்.


இதேவேளை இந்த சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சண்டேமோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் விளையாட்டுகழகம் ஒன்றுடன் நான் சந்திப்பில் ஈடுபட்டிருந்தவேளை தான் பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவித்த நபர் ஒருவர் என்னை தாக்கினார், பொலிஸ் விளையாட்டு சீருடையில் காணப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் என்னை நோக்கி தனது பிஸ்டலை இலக்குவைத்தார் இது குறித்து இலங்கைமனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


ஏன் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என கேள்வி எழுப்பியவேளை நான் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானதும் சபாநாயகரிடம் முறையிடுவேன் என தெரிவித்துள்ள அவர் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாகவே பொலிஸ்நிலையத்திற்கு செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.


சம்பவம் இடம்பெற்ற பிறகு அங்கு வந்த சிரேஸ்ட அதிகாரி இந்த சம்பவத்தை நிராகரித்ததுடன் இது பாரதூரமான விடயமல்ல என தெரிவித்தார்,என்னை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியாற்றும் அதேவேளை பொலிஸ் நிலையத்திற்கு என்னை வருமாறு அவர்அழைத்தார்,எனது உயிருக்கு ஆபத்துள்ளதால் நான் அங்கு செல்லவிரும்பவில்லை அதனால் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பல சாட்சியங்கள் உள்ளதால் அங்கேயே விசாரணைகளை மேற்கொள்ளுமாறுவேண்டுகோள் விடுத்தேன் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.





நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் உயிருக்கு ஆபத்து ஏர்படுத்தும் வித்தத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு