15,Jan 2025 (Wed)
  
CH
தொழில்நுட்பம்

2023 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வு (WWDC 2023) தொடங்கியது ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தொடக்க உரையுடன் தொடங்கிய WWDC 2023 நிகழ்வில் புதிய லேப்டாப், பிராசஸர், ஒஎஸ் வெர்ஷன்கள் என்று ஏராளமான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின. 

15-இன்ச் மேக்புக் ஏர்: 11.5mm மெல்லியதாக இருக்கும் புதிய மேக்புக் ஏர், இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் மெல்லிய 15 இன்ச் லேப்டாப் மாடல் ஆகும். முழு சார்ஜ் செய்தால் இந்த லேப்டாப்பை அதிகபட்சம் 18 மணி நேரத்திற்கு பயன்படுத்தலாம். இதில் மொத்தம் ஆறு ஸ்பீக்கர்கள் உள்ளன.


மேக் ஸ்டூடியோ: ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மற்றும் அளவில் சிறிய டெஸ்க்டாப் இது ஆகும். புதிய மேக் ஸ்டூடியோ மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் சக்திவாய்ந்த M2 மேக்ஸ் மற்றும் M2 அல்ட்ரா சிப்செட்கள் வழங்கப்பட்டுள்ளன.


மேக் ப்ரோ: யாரும் எதிர்பாராத நிலையில், ஆப்பிள் தனது மேக் ப்ரோ மாடல்களை சக்திவாய்ந்த சிலிகான் ரக பிராசஸர் மூலம் அப்டேட் செய்து இருக்கிறது. இத்துடன் மிகவும் சக்திவாய்ந்த M2 அல்ட்ரா சிப்செட்-ஐ ஆப்பிள் அறிமுகம் செய்து இருக்கிறது. ஹார்டுவேரை தொடர்ந்து சாஃப்ட்வேர் அறிவிப்புகளை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 17 வெர்ஷனில் ஏாளமான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு, புதிதாக ஜர்னல் ஆப், ஸ்டாண்ட்-பை, ஆட்டோ கரெக்ட் போன்ற புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு பயனர்கள் வாய்ஸ் அசிஸ்டணட்-ஐ ஹே சிரி என்று கூறுவதற்கு பதிலாக சிரி என்று மட்டுமே கூறலாம்.


ஐஒஎஸ் வரிசையில், ஐபேட் ஒஎஸ், வாட்ச் ஒஎஸ், மேக் ஒஎஸ் சோனோமா, ஏர்பாட்ஸ்-இல் புதிய அம்சங்கள் மற்றும் ஆப்பிள் டிவி சேவையில் புதிய ஆஃபர் வழங்கப்படுகிறது. 

விஷன்ப்ரோ ஹெட்செட்: இது ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாதனம் இது ஆகும். இந்த சாதனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இதன் அறிவிப்புடன், விலை மற்றும் விற்பனை விவரங்களையும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.





2023 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு