தேசிய மக்கள் சக்தியால் இன்று (வியாழக்கிழமை) நடத்த திட்டமிட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த பேரணியானது உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்தது.
அந்த நிலையில் அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே ஸ்ரீஜயவர்தனபுர வீதி, கொட்டா வீதி மற்றும் சரண வீதி ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் செயலகத்திற்குள் பிரவேசிப்பதை தடை செய்தே இந்த உத்தரவு பிறப்பிக்கிப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..