22,Feb 2026 (Sun)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் முதியவர்களை இலக்கு வைத்து செல்போன்கள் திருட்டு

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக தனியார் பேருந்துகளில் செல்லும் பெண்கள் முதியவர்களை இலக்கு வைத்து தொலைபேசி திருடும் கும்பலை சேர்ந்த பிரதான சந்தேக நபர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.


கைதானவரிடம் இருந்து திருடப்பட்ட 9 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


மேலும் திருடிய தொலைபேசிகளை வாங்கிய நால்வரும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காரைநகர், மானிப்பாய் வீதியில் பயணிக்கும் பேருந்துகளில் பயணம் செய்யும் வயது முதிர்ந்தவர்கள் பெண்களின் தொலைபேசிகளை திருடி வந்த புத்தளம் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் (08) யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் உப பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மேலும் சந்தேக நபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசி தொலைத்தவர்கள் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் உரிய முறைப்பாடுகளை காண்பித்து தொலைபேசிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணத்தில் முதியவர்களை இலக்கு வைத்து செல்போன்கள் திருட்டு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு