18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

பாலியல் தொழிலாளி 7 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிப்பு.

வவுனியாவில் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் வெள்ளிக்கிழமை (09.06) தெரிவித்துள்ளனர்.


இந் நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். குறித்த 7 பாலியல் தொழிலாளர்களும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 


எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.





பாலியல் தொழிலாளி 7 பேருக்கு நோய் தொற்று கண்டுபிடிப்பு.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு