அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று செவ்வாய்க்கிழமை (20) அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அப்பகுதியில் இடம்பெற்ற வேலைகளை உடனடியாக நிறுத்தி, அப்பகுதிக்குள் எவரும் செல்லாதவாறு தடை ஏற்படுத்தினர்.
அது தொடர்பில் இன்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில், அப்பகுதியில் தொடர்ந்து அகழ்வு பணிகளை முன்னெடுக்க அனுமதி கோர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீதிமன்ற கட்டளை கிடைத்ததும் அவ்விடத்தில் மேலதிக அகழ்வு பணிகளை முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments
No Comments Here ..