22,Dec 2024 (Sun)
  
CH
உலக செய்தி

டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிர்ழந்ததாக தெரிவிப்பு

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கரையோர படையினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.


"வைட் ஸ்டார்லைன்" எனும் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான டைட்டானிக் எனும் சொகுசு கப்பல், 1912-ம் வருடம் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 12-ம் தேதி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகத்திற்கு தொடங்கியது. 


முதல் பயணத்திலேயே 15-ம் தேதியன்று இரவு, வட அட்லாண்டிக் கடலில் பனிப்பாறை ஒன்றின் மேல் மோதியதால் அக்கப்பல் மூழ்கியது. இதில் 1500 பேருக்கு மேல் பலியானார்கள். அந்த துயர சம்பவம் நடந்து பல வருடங்களாகியிருந்தாலும், ஆழ்கடலுக்கடியில் தரை தட்டி நிற்கும் அந்த கப்பலை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள அவ்வப்போது பலர் ஆபத்தான முயற்சிகளை செய்வதுண்டு.


 தற்போது 21-அடி நீளமுள்ள ஒரு மினி நீர்மூழ்கி கப்பலில் 5 பேர் கொண்ட சுற்றுலா குழு ஒன்று டைட்டானிக் கப்பலின் மீதமுள்ள பாகங்களை காணச்சென்று, துரதிர்ஷ்டவசமாக காணாமல் போனது. இதனை தேடும் முயற்சி முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இன்னும் 24 மணி நேரமே போதுமான ஆக்சிஜன்தான் இருப்பு உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.


 இதற்கிடையே நேற்று சோனார் எனப்படும் கருவிகளை பயன்படுத்தி வடக்கு அட்லாண்டிக் பகுதியில் கப்பல் காணாமல் போன இடத்தில் "நீருக்கடியிலிருந்து சத்தம்" கேட்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்தது. இந்நிலையில், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்களை நீர்மூழ்கி ரோந்து வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


ஆனால், அது காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் தானா என்பது குறித்த தகவலை வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. மேலும், பிரித்தானிய நேரப்படி வியாழக்கிழமை 12.08 மணியளவில் ஆக்ஸிஜன் தீர்ந்துவிடும் என கூறப்பட்டுள்ளது. இதனால், நீர்மூழ்கி கப்பலில் உள்ள 5 பேரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 


இந்நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட உடைந்த பாகங்கள் தொடர்பாக கூடுதல் விவரம் குறித்து பாஸ்டனில் பிற்பகல் 3 மணிக்கு செய்தியளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படுவதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. 






டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிர்ழந்ததாக தெரிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு