23,Dec 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலங்கைப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்து இன்று மட்டக்களப்பு மற்றும் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிற்கு முன்னால் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

பயங்கரவாத பிரிவினைக்கு கனடா ஆதரவா? இதுவா அமைதி ? இதுவா நீதி? ஐ.நாவின் கோட்பாடுகளை மீறி கனடா அரசு இலங்கை உள் விவகாரங்களில் தலையிடுவதை கண்டிப்போம். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரார்கள் ஏந்தியிருந்தனர்.


யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து அவலங்களை எதிர் கொண்டவர்கள். யுத்தம் முடிவின் பின்னரே அமைதியான வாழ்க்கை வாழுகின்றோம். இத்தகைய அமைதியை குழப்பாதீர்கள் என ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷங்களை எழுப்பினர்.


இலங்கை தொடர்பில் கனடா பிராமர் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (23) கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சிங்கள ராவைய தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லையெனத் தெரிவித்தும் புலிகளே போர்க்குற்றத்தை இழைத்ததாகவும் அதற்கு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பியதுடன் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.





இலங்கைப் பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிடுவதைக் கண்டித்து இன்று மட்டக்களப்பு மற்றும் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு