பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“மக்கள் எதிர்ப்பார்த்த நாடு இன்று உருவாக்கப்படவில்லை.
விவசாய மக்கள் இலவச உரத்தை எதிர்பார்த்தனர். இன்று பணத்திற்கும் உரம் இல்லை.
வேறொரு ஜனாதிபதியுடன் நாட்டுக்காக உழைக்க எம்மால் முடியும்.
நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு மட்டுமே இணைந்து செயற்படுவோம்.
நாட்டுக்கு வலுவான எதிர்க்கட்சி தேவை.
நாம் எதிர்க்கட்சியில் அதிக நாள் இருக்க எதிர்ப்பார்க்கவில்லை.
பொதுத் தேர்தலில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
பாராளுமன்றத்தின் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் நாட்டை வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்ல முடியும்.
சஜித் பிரேமதாச புதிய கூட்டணியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளார் என்றார்.
0 Comments
No Comments Here ..