15,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

கொழும்பின் பல வீதிகளுக்கு தற்காலிக பூட்டு

இலங்கையின் சுதந்திர தின ஒத்திகை நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பு நகரத்தின் பல வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் பிப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெற உள்ளன. அதனை முன்னிட்டு நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான ஒத்திகை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

ஒத்திகைக்காக பல வீதிகள் காலை 7.30 மணி முதல் ஒத்திகை முடியும் வரை தற்காலிகமாக மூடப்படும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கொழும்பு பொது நூலக சுற்றுவட்டத்திலிருந்து ஹேர்டன் சுற்றுவட்ட வரையான வீதியும் , எஃப். ஆர். சேனநாயக்க மாவத்தை, கண்ணங்கரா மாவத்தை சந்தி மற்றும் தர்மபால மாவத்தை வரையான வீதியும் சொய்ஸா சுற்றுவட்டத்திலிருந்து கண்ணங்கரா மாவத்தை செல்லும் வீதி மற்றும் நந்தா மோட்டார்ஸ் சந்திப்பிலிருந்து தாமரை தடாகம் சுற்றுவட்டத்தை நோக்கிச் செல்லும் வீதியும் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளன.

120 பேருந்து வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்துகள் இபன்வாலா சந்தி வழியாக லிப்டன் சுற்றுவட்டத்தை நோக்கி பயணித்து தர்மபால மாவத்தை வழியாக செஞ்சிலுவை சந்தி மற்றும் நூலக நூலக சுற்றுவட்டம் வரை பயணம் செய்யும் வகையில் வீதி ஒழுங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு நோக்கி கிளாஸ் ஹவுஸ் சந்தியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் இடதுபுறம் திரும்பி தர்மபால மாவத்தை அல்லது லிபர்ட்டி சுற்றுவட்டம் நூலக சுற்றுவட்டம் வழியாக பயணிக்க வேண்டும்.

மேலும், பொரல்லயிலிருந்து ஹேர்டன் பிளேஸ் வழியாக கொழும்புக்குச் செல்லும் வாகனங்கள் வார்டு பிளேஸ் வழியாக சொய்ஸா சுற்றுவட்டம் மற்றும் பௌத்தாலோக மாவத்தை வழியாக காலி சாலை நோக்கி பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




கொழும்பின் பல வீதிகளுக்கு தற்காலிக பூட்டு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு