16,May 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை இலங்கைக்கு வழங்கவேண்டும் - கனடாவிற்கான இலங்கை தூதரகம்வேண்டுகோள்

கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள இந்து ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட இலங்கை தூதரகஅதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


கனடாவின் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாகரசபை உறுப்பினர்கள் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் உட்பட பெருமளவானவர்கள் இந்த தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தூதரக அதிகாரி கனடாவில் உள்ள தமிழ்சமூகம் கனடாவின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தில் ஆற்றல்மிக்க சக்தியாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.


கனடாவின் வலுவான தமிழ்வர்த்தக சமூகமும் மிகச்சிறப்பான கல்வியை கொண்டுள்ள இளம்தமிழ் தொழில்துறையினரும் கனடா சமூகத்திற்குள் தமிழ்மக்களை இணைப்பதற்கான உந்துசக்தியாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் அனைத்து சமூகத்தினருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்க பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடா தமிழ் சமூகம் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என தூதரக அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்





கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை இலங்கைக்கு வழங்கவேண்டும் - கனடாவிற்கான இலங்கை தூதரகம்வேண்டுகோள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு