04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

இந்தோனோசியாவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு மன்னிப்புகோரி இழப்பீடு திட்டம் - இந்தோனேசிய ஜனாதிபதி

இந்தோனோசியாவில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மிகமோசமான மனிதஉரிமைமீறல்களிற்காக மன்னிப்பு கோரியுள்ள இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோடு பாதிக்கப்பட்டவர்களிற்னு இழப்பீடு வழங்கும் திட்டத்தையும் ஆரம்பித்துள்ளார்.


1965 முதல் 2003 வரை இந்தோனோசியாவில் இடம்பெற்ற மிகமோசமான 12 சம்பவங்களிற்காக இந்தோனேசிய ஜனாதிபதி மன்னிப்பு கோரியுள்ளார்.


இக்காலப்பகுதியில் இந்தோனேசியாவில் இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக ஐந்துஇலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் மில்லியன் கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என அந்த நாட்டின் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்தோனேசியா இராணுவம் கம்யுனிஸ்ட்களை இலக்குவைத்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே இந்தஉயிரிழப்புகள் இடம்பெற்றன.

அசே பப்புவாவில் இடம்பெற்ற பிரிவினைவாத மோதல்களின் போதும் பாதுகாப்பு படையினர் படுகொலைகளில் ஈடுபட்டனர்.


இந்தோனேசியாவின் மூன்று தசாப்தகால சர்வாதிகாரி சுகார்ட்டோவிற்கு எதிராக 1998 இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்,இதனைதொடர்ந்து இடம்பெற்ற கலவரங்கள் காரணமாக 1800 பேர் கொல்லப்பட்டனர்.

இழப்பீடுஎத்தனை பேருக்கு வழங்கப்படும் எவ்வாறு வழங்கப்படும் போன்ற விபரங்களை அரசாங்கம் அறிவிக்கவில்லை.


இன்று நாங்கள் பாதிக்கப்பட்டவர்களிற்கான உரிமைகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைளை எடுக்கின்றோம் என அறிவித்துள்ள ஜனாதிபதி எதிர்காலத்தில் இவ்வாறான துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதை அரசாங்கம் தடுக்கும் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.





இந்தோனோசியாவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு மன்னிப்புகோரி இழப்பீடு திட்டம் - இந்தோனேசிய ஜனாதிபதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு