யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவரே அவ்வாறு காட்சிப்படுத்தி உள்ளார்.
குறித்த நபரின் வீட்டு வீதியோரமாக பலரும் குப்பைகளை வீசி சென்றுள்ளனர். அதனால் தினமும் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளார்.
அதனால் பொறுமை இழந்தவர், ஒரு பொம்மை ஒன்றினையும், யந்திர தகடு ஒன்றினையும் தனது வீட்டு வேலியில் கட்டி , “சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை போட வேண்டாம்" என பதாகை எழுதி காட்சிப்படுத்தி உள்ளார்.
அதன் பின்னர் அப்பகுதியில் எவரும் குப்பைகளை வீசி செல்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது
0 Comments
No Comments Here ..