28,Apr 2024 (Sun)
  
CH
ஆரோக்கியம்

வாழ்க்கை முறை மாற்றத்தினால் நீரழிவு தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்

 

நீரிழிவு என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அவரது வாழ்க்கை முறை மிகவும் பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோயை வேரிலிருந்தே ஒழிப்பதற்கான வழியை விஞ்ஞானிகளால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு தொடர்பான பிற நோய்களின் அபாயத்தை நாம் குறைக்கலாம். நவீன காலகட்டத்தின் வாழ்க்கை முறை மாற்றம், அதிக கலோரி கொண்ட உணவுகள் உண்பது, போதுமான உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகள் ஆகும். நீரிழிவு நோயின் எல்லா நிலையிலும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் உணவுப் பழக்கங்களால் கட்டுப்படுத்த முடியாது.


பொதுவாக நீரிழிவு நோயில் டைப் 1, டைப் 2 என்று இரண்டு வகை இருக்கிறது. டைப் 1 நீரிழிவு நோயானது இன்சுலின் சார்ந்த நிலையாகும். இந்நிலையில் கணையத்தில் உள்ள இன்சுலின் உருவாக்கும் செல்கள் முற்றிலும் அழிந்துவிடுவதால் நாம் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.


ஆகையால் டைப் 1 நீரிழிவு நோய்க்கு உணவு பழக்கங்களின் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. டைப் 2 நீரிழிவு நோய் வேண்டுமானால் உணவு பழக்கங்களை மாற்றி, உடல் எடையைக் குறைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப் படுத்தலாம். ஆனால் டைப் 2 பாதித்த ஆரம்பக்கட்டத்தில் இது சாத்தியம்.

மேலும் பல ஆண்டுகளாக டைப் 2 நீரிழிவு பாதிப்பு நீடித்ததால் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்கள் மெதுவாக அழியத் தொடங்கும். இந்நிலையில் உணவு பழக்க வழக்கங்களால் மட்டுமே கட்டுப்படுத்துவது சிரமமாகும். மாத்திரைகளின் உதவி கண்டிப்பாக தேவைப்படும்.


மாத்திரைகளின் தேவைகளை தீர்மானிப்பது கணையத்தில் இன்சுலின் சுரக்கும் செல்களின் எண்ணிக்கை, அதன் செயல்பாடு மற்றும் திசுக்களில் உள்ள இன்சுலின் எதிர்மறை நிலையின் அளவாகும். நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளான ஒருவர், மருந்துகளுடன் தகுந்த உணவு முறைகள், வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்துவது சிக்கலானது, நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)




வாழ்க்கை முறை மாற்றத்தினால் நீரழிவு தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு