05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இடைநிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் அகழ்வுபணிகள்

கடந்த 29.06.2023 அன்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வந்தன


விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் பயன்படுத்தியிருக்கக்கூடிய அணிந்திருக்கக்கூடிய சேர்ட்கள், மேலாடைகள் காணப்படுகின்றன. பெண்கள் பயன்படுத்தக்கூடிய மேலாடைகளும் காணப்பட்டன.

அது ஒரு மீற்றர் ஆழமான பகுதியிலேயே காணப்பட்டது. இது 10 தொடக்கம் 15 வருட காலத்துக்குட்பட்டதாக இருக்கலாம். இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்டதா அல்லது கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பெண்களின் உள்ளாடைகளும் காணப்படுவதால் இது இறுதிப்போரில் சரணடைந்த முன்னாள் போராளிகளின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது 


இதேவெளை இன்று வியாழக்கிழமை (06) அகழ்வு பணிகள் இடம்பெற்றன.


இந்நிலையில் மாலை 03.30மணியளவில் அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டதுடன், குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை (13.07.2023) அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப்பணிகளுடன் தொடர்புடைய திணைக்களங்கம் மற்றும், அமைப்புக்களுடன் விசேடகலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அக்கலந்துரையாடலைத் தொடர்ந்தே அகழ்வுப் பணிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறிப்பாக காலை 10.00மணியளவில் தொடங்கிய குறித்த அகழ்வுப்பணிகள், மாலை 03.30மணிவரையில் இடம்பெற்றன.


இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் பிரகாரம் 13 பகுதிகளில் 13 மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு, அவ்வாறு இனங்காணப்பட்டஇடங்கள் தடயவியல் பொலிசாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா, தடையவியல் பொலிசார் உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.


ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், வல்லிபுரம் கமலேஸ்வரன், பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ் பணிகள் இடம்பெற்றன.





இடைநிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் அகழ்வுபணிகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு