05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

தனது மகன் நாடு கடத்தப்படுவதை அவுஸ்திரேலிய பிரதமர்அன்டனி அல்பெனிஸ் தலையிட்டு நிறுத்தவேண்டும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ்பெண்ணொருவர் வேண்டுகோள்

ரீட்டா அருள்ரூபன் 2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றுள்ளார் பல வருடங்களாக பாதுகாப்பு விசாவில் வாழ்ந்தஅவருக்கு அரசாங்கம் நிரந்தர விசாவை வழங்கியுள்ளது.


அவர் தனது மகனை அவுஸ்திரேலியாவிற்கு உரிய நடைமுறைகளை பின்பற்றி அழைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் எனினும் 2016 இல் அவரது விண்ணப்பத்தை அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் நிராகரித்தது.

எனினும் அவரது மகன் டிக்ஸ்டன் 2019 இல் விமானம் மூலம் அவுஸ்திரேலியா சென்றதுடன் அங்கு அடைக்கலம் கோரினார்.


எனினும் அவரை அவுஸ்திரேலிய தொடர்ந்தும் குடியேற்றவாசிகளிற்கான முகாமில் தடுத்துவைத்துள்ளது.

இதேவேளை டிக்ஸ்டனை இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழர் என்பதால் தனதுமகன் இலங்கையில் சித்திரவதை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என அவரது தாயார் அச்சம் வெளியிட்டுள்ளார்.


பிரதமர் அவர்களே தயவு செய்து எனது மகனை என்னுடன் சேர்த்துவையுங்கள் எனது குடும்பத்தில் அவர் ஒருவர் மாத்திரமே எஞ்சியிருக்கின்றார் என ரீட்டா அருள்ரூபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமரை அவரது தாயார் மாத்திரமே வளர்த்தார் அவர் தாய்க்கும் மகனுக்கும் இடையிலான உறவின் மகத்துவத்தை புரிந்துகொள்வார் என நினைக்கின்றோம் எனவும் ரீட்டா தெரிவித்துள்ளார்.


அவுஸ்திரேலிய அரசாங்கத்தை சேர்ந்த எவரும் தனது குரலை செவிமடுக்கின்றார்கள் இல்லை எனவும் ரீட்டா அருள்ரூபன் தெரிவித்துள்ளார்.

எனக்கும் ஏனைய அகதிகளுக்கும் தயவு செய்து உதவுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்துஅகதிகளுக்கும் நிரந்தரவதிவிடத்தை வழங்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அருள்ரூபனின் கணவர் 2009ம் ஆண்டு படுகொலையில் கொல்லப்பட்டார் ஆயிரக்கணக்கானமக்கள் இலங்கை இராணுவத்தி;ற்கும் தமிழ் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு மோதலில் சிக்குண்டனர்.


அவரின் 26 வயது மகனின் அவுஸ்திரேலிய பாதுகாப்பு விசாவிற்கான விண்ணம் நிராகரிக்கப்பட்டுள்ளது அவருக்கான வாய்ப்புகள் அனைத்தும் முடிவிற்கு வந்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமருக்கான அவரது வேண்டுகோளே அவரது இறுதி நம்பிக்கை.

நான் பெருமளவுமனஉளைச்சலை எதிர்கொண்டேன் நான் பாலியல் வன்முறையை எதிர்கொண்டேன் அதிலிருந்து தப்பி நான் அவுஸ்திரேலியா வந்தேன் என ரீட்டா தெரிவித்துள்ளார்.


நான் எனது மகனுடன் இணையலாம் என நினைத்தேன் அவர்கள் எனது மகனை என்னிடமிருந்து கொண்டுசெல்ல முயல்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்





தனது மகன் நாடு கடத்தப்படுவதை அவுஸ்திரேலிய பிரதமர்அன்டனி அல்பெனிஸ் தலையிட்டு நிறுத்தவேண்டும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ்பெண்ணொருவர் வேண்டுகோள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு