21,Nov 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

குருந்தூர் மலையில் இன்று பொங்கல் நிகழ்வை மேற்கொள்ளவிருந்தப்போது பிக்குமார்களால் குழப்பம்

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பிக்குகள் தடங்கள் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த பொங்கல் விழாவுக்கு அனுமதி கோரி ஏற்பாட்டாளர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்திருந்தது.

இன்று காலையில் பொங்கல் விழாவுக்காக தமிழ் மக்கள் சென்றபோது, அங்கு பெரும்பான்மையினர் பலருடன். பௌத்த பிக்குகளும் குவிந்திருந்தனர்.


அங்கு தீமூட்டி பொங்கல் செய்ய முடியாது என பெரும்பான்மையினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது

இதையடுத்து தொல்பொருள் திணைக்களத்தினரை நாடிய தமிழ் தரப்பினர், நீதிமன்ற அனுமதிப்படி பொங்கல் மேற்கொள்ள அனுமதிக்கும்படி கேட்டுள்ளனர்.

நிலத்தில் தீ மூட்டாமல், தகரம் வைத்து அதன்மேல் கல் வைத்து தீமூட்டுமாறு தொல்பொருள் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர். அதன்படி பொங்கள் செய்ய ஏற்பாடு செய்த வேளை அடுப்பில்  கற்பூரத்தை வைத்து மூட்டுகின்ற போது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தனது சப்பாத்து காலினால் அந்த கற்பூரத்தினை அணைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது


பொங்கள் நிகழ்வு தொடர்பில் வெலி ஓயா சப்புமல் தன்ன விகாரை மற்றும் குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குருந்தி விகாரை ஆகியவற்றின் விகாராதிபதி கல்கமுவ சாந்த போதி தேரரால் கடந்த 11 ஆம் திகதி  காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் காவல்துறையினர் “இந்தப் பொங்கல் நிகழ்வானது இனங்களுக்கு குழப்பங்களை விளைவிக்கும் என்றும் குறித்த பகுதியில் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யப் போவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்” கூறி தடை உத்தரவை கோரினர்.



இருப்பினும் இவ்வாறான நடவடிக்கைகளை தாம் செய்ய முயற்சிக்கவில்லை என எதிர் தரப்பால் கூறப்பட்ட நிலையில், வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடை உத்தரவை வழங்கவில்லை.

அத்தோடு, குருந்தூர் மலையில் இன்று (14) நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இல்லையேல் இனவாத கலவரம் ஏற்படலாம் என்றும், “போராட்டத்திற்கும் அப்பால்” என்ற அமைப்பின் தலைவரான பலாங்கொடை கஸ்ஸப தேரர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (சி.ஐ.டி) கடிதமொன்றை அனுப்பியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.




குருந்தூர் மலையில் இன்று பொங்கல் நிகழ்வை மேற்கொள்ளவிருந்தப்போது பிக்குமார்களால் குழப்பம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு