15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

நிகழ்நிலை முறைமை ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு கடந்த மாதத்தில் மாத்திரம் 29,579 பேர் விண்ணப்பித்துள்ளனர்

ஒரு நாள் சேவைக்காக  5294 பேரும் , சாதாரண சேவைக்காக 24,285  பேரும் விண்ணப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நிகழ்நிலை முறைமையில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் சேவை கடந்த மாதம் 15ஆம் திகதி மஹரகம பிரதேச செயலக பிரிவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இதற்கமைய கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான 15 நாட்களுக்குள் மாத்திரம் 51 பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக 29,579 பேர் விண்ணப்பித்துள்ளனர்.



வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் ஏற்பட்ட சன நெரிசல், கடவுச்சீட்டு விநியோகத்தில் இடம்பெற்ற மோசடி ஆகிய காரணிகளை கருத்திற்கொண்டு கடவுச்சீட்டு விநியோக சேவையை இலகுபடுத்த பிரதேச செயலகங்கள் ஊடாக கைரேகை பதிவு மற்றும் கட்டணம் செலுத்தல் ஆகிய சேவைகள் நிர்வாக மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 51 பிரதேச செயலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.





நிகழ்நிலை முறைமை ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு கடந்த மாதத்தில் மாத்திரம் 29,579 பேர் விண்ணப்பித்துள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு