27,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

குளிரான காலநிலையைக் கொண்ட ஐரோப்பிய கண்டத்தில், தற்போது பல நாடுகள் கடும் வெப்பத்தால் தவித்துவருகின்றன

ஐரோப்பாவை மற்றொரு வெப்பஅலை நெருங்கும் நிலையில், எதிர்வரும் வாரத்தில் ஐரோப்பாவில், குறிப்பாக தெற்கு ஐரோபபாவில், வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

இத்தாலியின் 16 நகரங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்குப் பிரசித்தி பெற்ற தலைநகர் ரோம், புளோரன்ஸ். பொலோக்னா முதலான நகரங்களில் ஆரோக்கியமான மனிதர்களுக்குகூட ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்பநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ஸ்பெய்ன், பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து, செக்குடியரசு முதலான நாடுகளிலும் கடும் வெப்பநிலை நிலவும் என ஐரோப்பிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. தரை மற்றும் கடல் வெப்பநிலைகளை செய்மதிகள் ஊடக ஐரோப்பிய விண்வெளி முகவரகம் கண்காணித்து வருகிறது. 


சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் முற்பகல் 11 மணி முதல் மாலை 6.00 மணிவரை நேரடி சூரியஒளியை தவிர்த்துக்கொள்ளுமாறும் வயோதிபர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் பொதுமக்களை இத்தாலிய அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.

இத்தாலியின் ரோம் நகரில் நாளை திங்கட்கிழமை 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும், செவ்வாய்க்கிழமை (18) இது 43 பாகை செல்சியஸாக அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. ரோம் நகரில் ஆகக்கூடுதலாக 2007 ஆம் ஆண்டு 40.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. 

கிறீஸின் சில பகுதிகளில் நேற்றுமுன்தினம் 44.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.


இத்தாகலியின் சிசிலி தீவில் 2021 ஆகஸ்ட்டில் 48.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதுவே ஐரோப்பாவில் பதிவான ஆக்ககூடுதலான வெப்பநிலையாகும். 

இதேவேளை, அமெரிக்காவில் புளோரிடா, டெக்ஸாஸ், கலிபோர்னியா, அரிஸோனா, வொஷிங்டன் உட்பட பல மாநிலங்களிலும் கடும் வெப்பநிலை நிலவுகிறது. நேற்றுமுன்தினம் 113 மில்லியன் அமெரிக்கர்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.



ஆசிய நாடான ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்றும் நாளையும் 39 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தியாவின் வட பகுதியில் கடும் வெப்பநிலைக்குப் பின்னர், கடந்த பல நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், 90 இற்கும் அதிகமானோர் உயிரிந்துள்ளனர்.





குளிரான காலநிலையைக் கொண்ட ஐரோப்பிய கண்டத்தில், தற்போது பல நாடுகள் கடும் வெப்பத்தால் தவித்துவருகின்றன

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு