15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

டெல்லியில் பாயும் யமுனை ஆற்று வெள்ளத்தை கட்டுப்படுத்த இராணுவமும் கடற்படையும் தீவிர முயற்சி

டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் ஓடும் யமுனை உள்ளிட்ட ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரப் பகுதிகளில் உள்ள ஊர்களில் வெள்ளம் புகுந்துள்ளது. இதுதவிர மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியைப் பொறுத்தவரை ஓரிரு நாட்களில் மழை குறைந்துவிட்டது. ஆனாலும் யமுனை ஆற்றுக்கு அருகே கட்டப்பட்டுள்ள ஐடிஓ தடுப்பணையின் மதகுகளின் கதவுகள் திறக்க முடியாமல் ஜாம் ஆகி உள்ளதால் டெல்லிக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதுதவிர யமுனை கரையோரப் பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பெரும்பாலான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


இந்நிலையில், டெல்லிக்குள் பாயும் வெள்ளத்தை கட்டுப்படுத்த உதவுமாறு ராணுவம் மற்றும் கடற்படையினருக்கு டெல்லி நிர்வாகம் கடந்த 13-ம் தேதி இரவு கோரிக்கை வைத்தது. இதையடுத்து, ராணுவம் மற்றும் கடற்படை பொறியாளர்கள் குழுவினர் ஐடிஓ தடுப்பணையில் ஜாம் ஆகியுள்ள மதகு கதவுகளை திறக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவுபகலாக மேற்கொண்ட முயற்சியால் ஒரு கதவு மட்டும் திறக்கப்பட்டுள்ளது. மற்ற கதவுகளையும் திறக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.


மேலும் அதே பகுதியில் உலக சுகாதார அமைப்பின் கட்டிடம் அருகே தண்ணீர் கட்டுப்பாட்டு கதவு சேதமடைந்ததால் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தை தடுப்புகள் அமைத்து திருப்பிவிடும் பணியில் மற்றொரு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.



மேலும் வசிராபாத் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. அந்த நிலையத்தில் இருந்து வெள்ளத்தை வடித்துவிட்டு, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் பணியிலும் ராணுவத்தின் ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் கூறும்போது, “ஐடிஓ தடுப்பணையில் உள்ள 32 கதவுகளில் 5 ஜாம் ஆகி உள்ளது. இதில் ஒரு கதவு மட்டும் 20 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. ராணுவமும் கடற்படையும் இரவு பகலாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.





டெல்லியில் பாயும் யமுனை ஆற்று வெள்ளத்தை கட்டுப்படுத்த இராணுவமும் கடற்படையும் தீவிர முயற்சி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு