ஜூன் 28 ம் திகதி அனுராதபுரம் வைத்தியசாலையில் நோயாளியொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து ரவிகுமுதேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயாளியின் மரணம் குறித்து உறவினர்களுக்கு சந்தேகம் உள்ள போதிலும் அவர்களால் முறைப்பாடு செய்ய முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவேளை குறிப்பிட்ட நோயாளி உயிரிழக்ககூடிய ஆபத்தான நிலையில் காணப்படவில்லை அவருக்கு மயக்கமருந்து செலுத்தப்பட்டது அதன் பின்னர் அவருக்கு நினைவுதிரும்பவில்லை என ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார். அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.
சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் குறித்து அறிவிக்கப்படாமலிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ரவிகுமுதேஸ் இவ்வாறான மரணங்கள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கான உரிய அமைப்பினை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..