உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது.
டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரீ பிராண்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரீ பிராண்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். இந்நிலையில், டுவிட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளது என எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..