21,Nov 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

நாடு கடத்தப்பட்ட இலங்கை வீட்டுப்பணிபெண்கள்

குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் உட்பட 62 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

 இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான கடவுச்சீட்டின் கீழ் குவைத்தில் நாடு கடத்தப்பட்டு இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

இவர்களில் 59 பேர் வீட்டு பணிப்பெண்கள் எனவும் மீதமுள்ள மூன்று பேர் ஆண் பணியாளர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக விடுதிகளில் தங்கி, பல்வேறு பணியிடங்களில் மாதந்தோறும் பணிபுரியும் இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்தார்.


250 குவைத் தினார் சம்பளம் பெற்று விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர் என்று அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், சுகவீனம், வயோதிபம் போன்ற காரணங்களால் இலங்கைக்கு வருவதற்காக இலங்கை தூதரகத்தில் இவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கைக்கு வருவதற்காக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் தற்போது 2000 க்கும் மேற்பட்ட இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் பதிவு செய்துள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இவர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார், குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதிமன்றங்களுடன் இணைந்து இலங்கைத் தூதரகம் பணியாற்றி வருகின்றது. அவர்களுக்கான தற்காலிக கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாட்டை விட்டு அனுப்பியது. இக்குழுவினர் இன்று காலை 5 மணியளவில் குவைத் நாட்டில் இருந்து அல் ஜசீரா விமானம் ஜே – 9555 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.




நாடு கடத்தப்பட்ட இலங்கை வீட்டுப்பணிபெண்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு