21,Nov 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தினரின் எதிர்ப்பு நடவடிக்கை

இதன்போது EPF ETF ஓய்வூதியத்தில் கை வைக்காதே, அடிமை தொழிலாளர் சட்டம் வேண்டாம், சகல ஊழியர்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்கு, IMF மரண பொறியை தோற்கடிப்போம் உள்ளிட்ட விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.


கொழும்பு - பொரளை பகுதியில் இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன

அப்பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் வைத்து ஊடகவியலாளர் தரிந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தான் முச்சக்கரவண்டிக்குள் இருந்து காணொளி பதிவு செய்து கொண்டிருந்த நிலையில் தன்னை தாக்கி கைது செய்ததாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் நீதிமன்ற தடை உத்தரவு வாசித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் அமைதியின்மை பதிவாகியுள்ளது.



இந்த தடை உத்தரவை ஏற்றுக்கொள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ள போதும் இந்த உத்தரவை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது




இன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தினரின் எதிர்ப்பு நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு